Thursday, 7 April 2011

இவை என்னுடைய கிறுக்கல்கள்


பல சந்தோஷங்கள் சில துக்கங்கள்
பல கருத்து வேறுபாடுகள் சில கருத்து ஒற்றுமைகள்
பிறருடன் ஒன்றிணைத்து பேசும் கேலிகளும் கிண்டல்களும்
சில நேர படிப்பும்  பல நேர மொக்கையும் ஊர்சுற்றலும்
எங்கும் கிடைக்காத கல்லூரி வளாகமும், இரும்பு இருக்கைகளும்
மறக்கவேண்டிய சில நிமிடங்களோடு என்றும் மறக்க முடியாத
பல நேர நினைவுகளுடன் நானும் உன் நினைவில்
ஓர்  கடைநிலை நண்பனாகவாது இருக்க வேண்டுமென்ற
வேட்கையுடன் நான்

-மீ. ஜீவானந்தம்


கவிதை எழுத காதலித்தேன்
கவிதை எழுதுவதையே நிறுத்தினேன்
அவளை மறப்பதற்காக........

கருத்துகள் கைக்கடிகாரம் போல
ஒவ்வொருவருடைய கடிகாரமும்
மற்றவர்களை விட வித்தியாசப்பட்டு
நேரம் காட்டும். ஆனால் ஒவ்வொருவரும்
தங்களுடைய நேரம் தான் சரி என்று
நினைத்துக் கொள்கிறோம்.

சிலரின் கண்ணீரில்
உயிர் வாழ்கிறோம்
மழைத் துளி!

கண்ணீர்  விடும் மேகம் கூட
உன்னை பார்த்து கண்ணீர் விடுவதில்லை
தயவு செய்து மேகத்தின் கண்ணில் படாதே
மழை பெய்யட்டும்.



1 comment:

  1. Kavidha Kavidha...

    Deivamae neenga engayo poiteenga!

    ReplyDelete