Wednesday, 29 February 2012

நீ எனக்கும் கிடைத்து இருப்பாய்....


க்ளோனிங் தடை செய்யாமல்
இருந்திருந்தால்
நீ எனக்கும் கிடைத்து இருப்பாய்....

- மீ. ஜீவானந்தம் 

Thursday, 16 February 2012

உன்னைப் பார்த்தாலே


உன்னைப் பார்த்தாலே
கவிதை எழுத தோன்றுகிறது
கவிதைதைப் பார்க்கப் பார்க்க
கவிதை எழுத தோன்றுவது
சகஜம் தானே.....

-மீ.ஜீவானந்தம் 

Sunday, 5 February 2012

உன் காதல் தோல்வியடையட்டும்!!


சிலரின் காதல் தோல்வியின்
கண்ணீரில் உயிர் வாழ்கிறோம்
மேகத்தின் காதல் ஜெய்த்தது போலும்
இப்போதெல்லாம் அழுவதில்லை !
உன் காதல் தோல்வியடையட்டும்!!

மீ.ஜீவானந்தம் 

நான் உன்னை நேசிக்கும் போது
உன்னையே சுவாசித்தேன்
சுவாசம் என்னைவிட்டு பிரிந்ததால்
நான் இப்போது கல்லறையில்....

மீ.ஜீவானந்தம் 

Saturday, 4 February 2012

கோடைக் காற்றும் இதமாக தான் இருக்கிறது.....


கல்லூரிக்கு செல்லும் சாலையின்
இருபுறமும் மரங்கள்
அவற்றில் சில
தன் மஞ்சள் நிற பூக்களால்
சாலையை அலங்கரிக்க
பிற மரங்கள் அளிக்கும்
அந்த கோடைக் காற்றும் கூட
இதமாக தான் இருக்கிறது
என்னவளோ (அ) என்னவளின் நினைவுகளோ
என்னோடு பயணிக்கும் போது....

-மீ. ஜீவானந்தம் 

அன்பே...


அன்பே...
நீ இல்லாமல் நேரம்
போகவில்லை....
நீ இருந்தால் நேரம்
போதவில்லை....

-மீ.ஜீவானந்தம் 

மதவெறி


ஒளியும் கூட மதவெறியனுக்கு
வேறாகதான் தெரியும்
சூரிய ஒளி - இந்து
விடி வெள்ளி - கிறிஸ்துவம்
நிலவொளி - இஸ்லாம்

- மீ. ஜீவானந்தம் 

Refill


தேவைக்கு பயன்படுத்தி
தூக்கியெறியப்படும் பொருளாக
நான் ரீபில்

-மீ. ஜீவானந்தம் 

Friday, 3 February 2012

அவளிடம் பேசவில்லை....


அவளின் கண்கள் என்னிடம் பேசின!...
அவளின் மௌனம் என்னிடம் பேசின!...
அவளின் கைகள் என்னிடம் பேசின!...
அவளின் பாதங்கள் என்னிடம் பேசின!..
ஏனோ தெரியவில்லை நான் இன்னும் 
அவளிடம் பேசவில்லை....

-மீ. ஜீவானந்தம் 

உன்னிடம்.....


எல்லாரிடமும் உன்னைப் பற்றி
பேசுகிறேன்....
உன்னிடம் தான்
எதுவும் பேசமுடிவதில்லை.....

- மீ. ஜீவானந்தம் 

நான் உன் மேல் கொண்ட 
காதலைப் பற்றி எல்லாரிடமும் 
கூறுகிறேன்...
உன்னை தவிர....

- மீ. ஜீவானந்தம் 

Wednesday, 1 February 2012

இதயத்திலிருந்து சில வரிகள் - 2....


என் காதுகளும், என் இதழ்களும் காத்திருகின்றன
உன் அழைப்புக்காக.....
என் விரல்கள் காத்திருகின்றன உன் குறுஞ்செய்திக்காக....

-மீ.ஜீவானந்தம் 


என் மொபைல் சிணுங்கும் போதெல்லாம் 
மூளை ஆர்வமாகிறது....
மனம் துடிக்கிறது...
இதயம் வேண்டுகிறது...
அழைப்போ!! குறுஞ்செய்தியோ!!
அது உன்னுடையதாக இருக்க வேண்டுமென்று....


-மீ.ஜீவானந்தம் 


அவளோடு பேசிய நாட்கள்....
அவளோடு பழகிய நேரங்கள்....
அவளோடு நடந்த நொடிகள்....
அவளுடைய சிரிப்பு....
என்னை ஈர்த்த அவளுடைய பார்வை....
இவற்றை எப்படி மறக்க முடியும்....

-மீ.ஜீவானந்தம்

இதயத்திலிருந்து சில வரிகள் .....

இழப்பில்லாமல் எதுவும் 
இங்கு கிடைப்பதில்லை
எல்லவற்றையும் இழக்க தயார் 
உன் அன்பொன்று கிடைக்கும் என்றால்.......

-மீ.ஜீவானந்தம்