கல்லூரிக்கு செல்லும் சாலையின்
இருபுறமும் மரங்கள்
அவற்றில் சில
தன் மஞ்சள் நிற பூக்களால்
சாலையை அலங்கரிக்க
பிற மரங்கள் அளிக்கும்
அந்த கோடைக் காற்றும் கூட
இதமாக தான் இருக்கிறது
என்னவளோ (அ) என்னவளின் நினைவுகளோ
என்னோடு பயணிக்கும் போது....
-மீ. ஜீவானந்தம்
No comments:
Post a Comment